உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.
எலுமிச்சைகள் அவற்றின் சுத்திகரிப்பு பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டவை. எலுமிச்சை சிறந்த கல்லீரல் நச்சு நீக்கி, மற்றும் கல்லீரல் உணவை பதப்படுத்தும் மற்றும் கொழுப்பை கரைக்க பெரும்பங்கு வகுக்கிறது . எலுமிச்சை உடலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது.