மிகுந்த மருத்துவகுணம் வாய்ந்த காய்களில் ஒன்று கொத்தவரங்காய் !!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (15:46 IST)
கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. இரும்பு சத்து, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.

கொத்தவரங்காய் சற்று கசப்பு சுவை உடையது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் வாதம் அதிகரிக்கும் என்றும் கை, கால் வலி உண்டாகும் என்றும் சிலர் கருதுகிறார்கள். அத்துடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து சமைப்பதால் அதில் இருக்கும் வாததன்மை சமநிலையடைந்து விடும்.
 
கொத்தவரங்காய் விதை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அதை பொடி செய்து மருந்து தயாரிக்கிறார்கள். இந்த பொடி சர்க்கரைநோயை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையையும், உடல் கொழுப்பையும் குறைக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.
 
கொத்தவரங்காய் விதை பொடியில் புரதமும், நார்ச்சத்தும் இருக்கிறது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்தாக இருப்பதால் மலச்சிக்கலை எளிதாக போக்குகிறது. மேலும் ஜீரணப் பாதை ஆரோக்கியமாக இயங்கவும் உதவுகிறது. அடிக்கடி மலம் கழிக்கும் உணவுர்வினை உண்டாக்கக்கூடிய பெருங்குடல் அழற்சி நோய்க்கு இந்த விதை பொடி சிறந்த மருந்தாகும்.
 
இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, 200 மி.லி நீரில் கலந்து சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக குடித்துவிடவேண்டும். அவ்வாறு செய்தால் அதிகம் பசிக்காது. சாப்பிடும் உணவின் அளவு குறையும். உடல் எடை அதிகம் கொண்டவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்