கேழ்வரகு மாவுடன் நெய் சேர்த்து நன்றாக கிளறி சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமையை பெறும். கேழ்வரகை கூழ், கஞ்சி, களி, இட்லி, தோசை, புட்டு, ரொட்டி, பக்கோடா இது போன்று செய்து சாப்பிடலாம்.
கேழ்வரகு உடலில் தீங்கு விளவிக்கக்கூசிய கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச்செய்கிறது. மேலும் கேழ்வரகில் உள்ள லெசித்தின், மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
கேழ்வரகில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சரி செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும்.
கேழ்வரகானது எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவாகும். இது பச்சிளங் குழந்தைக்கு கூட உகந்தது. 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை நோய் குணமாகவும் கேழ்வரகு உதவுகிறது.