உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை தரும் பலாப்பழம் !!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (18:00 IST)
பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.


பலாப்பழம் கண்களின் நலனை காக்கிறது. தைராய்டு சுரப்பி, சீராக சமநிலையில் இயங்க உதவுகிறது.

பலாபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.

குடல் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. இரத்தசோகை குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சருமத்திற்கு மினுமினுப்பையும், எலும்புகளுக்கு வலுவையும் தருகிறது. உடலின் இரத்த அழுத்த நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. இளநரை, பொடுகு பிரச்சினைகளை விரைவில் சரி செய்கிறது. உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்