தலைக்கு எண்ணெய் தேய்த்து கொள்வது நல்லதா கெடுதலா....?
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள்.
ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் முறையை தான் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதி;ல்லை.
நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.
முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.
தலைக்கு அதிக அளவில் எண்ணெயை வைக்கக் கூடாது. இவ்வாறு எண்ணெய் வைத்தால், அது தலைமுடியின் வேர்களில் நிரம்பிவிடும். இப்படி செய்வதன் மூலம், முடிக்கு சீரான வளர்ச்சிக் கிடைக்காமல் முடி கொட்டிவிடும்.
எண்ணெய் தலைக்கு தேய்த்தால் ஒரு சிலர் ஒரு வாரத்திற்கும் மேல், தலைக்கு குளிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் சளி பிடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், அவ்வாறு தலைக்கு எண்ணெய் தேய்த்தால், 2 நாட்களுக்குள் குளித்துவிட வேண்டும். இல்லையென்றால், முடிக்கொட்டும் அபாயம் இருக்கிறது.
குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பே தலையில் எண்ணெய்யை ஊறவைக்க வேண்டும். அப்போது தான் அது நன்றாக வேர்களில் ஊடுருவும். சிலர் தலை முடியில் உள்ள சிக்கல்களை எடுப்பதற்காகவே, எண்ணெய்யை வைத்து எடுப்பார்கள். ஆனால், இப்படி செய்தால் அது இன்னும் ஆபத்தாக முடியும். சிக்கல் எடுத்த பிறகு தான், முடியில் எண்ணெய்யை தடவ வேண்டும்.