அதிமதுரத்தை இந்த முறையில் பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா...?
அதிமதுரத்துடன் சம அளவு தோல் சீவிய சுக்குத்தூள் சேர்த்து, இதனுடன் தேன் சேர்த்து காலை, மாலை கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். மேலும் இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.
முடி உதிர்வது நிற்க, அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரம் கழித்துக் குளிக்க, தலைமுடி பிரச்சனைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் இருக்கும். நரையும் நீங்கும்.
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.