அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
கூந்தல் அதிக வறட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அரிசி கழுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.
அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.