கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது.
கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு செல்லும்போது 2-3 வித்தியாசமான பழங்களை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்த பழங்கள்.
பழங்களை முடிந்தவரையில் அப்படியே கடித்து சாப்பிடுவது தான் சிறந்தது. பொதுவாக பழங்களை எப்போதும் வெளியே செல்லும் போது வெட்டி எடுத்துச் செல்லக் கூடாது. அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அறவே வெட்டக்கூடாது. இவ்வாறு நறுக்கிய பழங்களை சாப்பிடுவதால் எளிதில் வயிறு நிறைவதோடு, உடல் வறட்சியை தடுக்கலாம்.