கோடையில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனையை சமாளிக்க...

Webdunia
கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு நீர்சத்து ஆகாரங்கள் குடிக்காமால் இருப்பதால், இதனால் சிறுநீர்  வெளியேறும் அளவு குறைகிறது. இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறுகிறது.  இதனால் எரிச்சல், வலி, மற்றும் கடுப்பும் ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் தான் இரத்தமானது சுத்திகரிக்கப்பட்டு, இரத்தத்தில் உள்ள  கெட்ட நீரான சிறுநீரை பிரித்தெடுக்கும்.

 
காரணம்:
 
வெகு நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சிறுநீரக பிரச்சனைகள் ஆண்களை விட  பெண்களுக்கு அதிகம் ஏற்படும்.
 
சிறுநீரக பாதையில் ஈகோலை என்னும்  கிருமியால் தொற்று ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறது. இது  வெயில் காலங்களில் பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளது.
 
வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவதால் உப்பு கலந்த கழிவு பொருட்கள் வெளியேரமால், கொஞ்சம், கொஞ்சமாக படிந்து  சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
 
அறிகுறிகள்:
 
அடிக்கடி  சிறுநீர் கழிக்கலாம் போன்று உணர்வு வரும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மற்றும் வலி ஏற்படும். அடிவயிற்றில்  வலி எடுக்கும். குழந்தைகள் அதனை அறியமாலே சிறுநீர் கழிப்பார்கள். இந்நோய் அதிகமாகும் போது குளிருடன் காய்ச்சல்  ஏற்படும்.
 
சிறுநீர் பரிசோதனை (Urine Full report - UFR)  மூலம் சுலபமாகக் கண்டறியலாம். ஆனாலும் அடிக்கடி சிறுநீர்  தொற்று ஏற்பட்டால் அது 'நரம்பு பாதிப்பிற்குள்ளான சிறுநீர்ப்பை' பிரச்சனையின் முதல் அறிகுறியாக இருக்கலாம் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.
 
பகலில் மட்டுமின்றி இரவிலும் இந்த உணர்வு ஏற்படுவதால் ஒழுங்கான தூக்கமும் இல்லாமல் போகும். எத்தனை தடவைகள்  என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆயினும் ஒரு நாளில் 8 தடவைகளுக்கு மேல் சிறுநீர் கழிக்க கழிப்பறை செல்லுதலை  நோயின் அறிகுறி என்று குறிப்படலாம்.
 
தவிர்க்க:
 
அதிக அளவு தண்ணீர் குடிக்கலாம். காரட் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிக காரமான உணுவுகளை தவிர்க்கவும்.  முள்ளங்கி ஜூஸ் 25 மி.லி. தினமும் இரண்டு முறை சேர்த்து கொள்ள வேண்டும். எலுமிச்சை பழம் ஜூஸ் ஒரு நாளைக்கு  மூன்று முறை குடித்தால் சிறுநீர் கடுப்பு குறையும். இளநீர் குடிக்காலம். தினமும் தக்காளியை உணவில் சேர்ப்பதால்  தக்காளியில் உள்ள வைட்டமின் சி, சிறுநீர் எளிதாக வெளியேற உதவும்.
அடுத்த கட்டுரையில்