உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான அற்புத மருந்து மிளகு!!

Webdunia
மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால்தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம். உணவில் காரத்தை கூட்டவும், கூடுதல் சுவையை ஏற்படுத்தவும் கருப்பு மிளகு பயன்படுகிறது.



ஆனால், எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல மருத்துவ காரணங்களுக்காக நம் முன்னோர்கள் உணவுகளில் பயன்படுத்தினர்.
 
1. மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது. மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை மஞ்சளுடன் கலக்கும்போது, அதன் புற்று எதிர்ப்பு குணங்கள் இன்னமும்  அதிகரிக்கும். 
 
2. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். (மருந்து வீறு என்பது கடும்  மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல் போன்றவையாகும்.) 
 
3. அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலை பாரம், தலைவலி  தீரும். 
 
4. மிளகு 4 கிராம், பெருங்காயம் 1 கிராம், கழற்சிப்பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்துத் தேனில் அரைத்து 200 மி.கிராம்  எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல்,  யானைக்கால் காய்ச்சல் ஆகியவை தீரும். 
 
5. மிளகைப் புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி தீரும்.
 
6. மிளகு, சந்தனம், கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மேல் பூச குணமாகும். மிளகுத்தூள்  1 மி.கிராம், சிறிய வெங்காயம் இரண்டு, அரை கிராம் உப்பு இம்மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில்  தடவி வர புழு வெட்டு நிற்கும். 
 
7. 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து உருட்டி நாள்தோறும் காலையில் விழுங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தைந்து நாட்கள் சாப்பிட நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.
 
8. மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த  சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும். மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
அடுத்த கட்டுரையில்