கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன.
கொழுப்பை குறைப்பதில் கொள்ளுவிற்கு முக்கிய பங்கு உள்ளது. குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால் தான், குதிரை கொழுப்புக் கூடாமல் இறுக்கமான உடல் தோற்றத்துடன் இருக்கிறது. அதிவேகமாக ஓடுகிறது, இதன் காரணமாகதான் இதை, குதிரைக் கொள்ளு என்றும் சொல்கிறார்கள்.
கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும். மேலும் வாரம் இரண்டு முறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் குணமாகும்.