நம் தலைமுடிக்கு ஏன் எண்ணெய் தேய்க்கவேண்டும்...?

வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:09 IST)
நம்முடைய உச்சந்தலை மற்றும் தலைமுடிக்கு ஈரப்பதமாக இருக்கவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் எண்ணெய் தேவைப்படுகிறது. நாம் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.


முடி அழகாக அடர்த்தியாக வேகமாக வளர்வதற்கு எண்ணெய் மிகவும் அவசியமான ஒன்று. தலைக்கு தேய்க்கும் எண்ணெய் முடி வளர்ச்சியை மிக அதிகமாக ஊக்குவிக்கிறது. முடிக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. கூந்தல் மிகவும் பிரகாசமாக ஜொலிக்க எண்ணெய் உதவுகிறது.

அதிக அளவு எண்ணெய் பிசுக்கை ஏற்படுத்தும் அல்லது வறட்சியை ஏற்படுத்தும். எண்ணெய் மயிர்கால்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. தூசி, புற ஊதாக்கதிர்கள், மாசுகள் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இருந்து முடியை பாதுகாக்கிறது. முடி வறட்சியையும் தடுக்கிறது.

உங்களுடைய முடி வகைக்கு எந்த வகையான எண்ணெய் சரியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி அந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். தலை அதிக அளவு எண்ணெய்த் தன்மையோடு இருந்தால் பாதாம் போன்ற லேசான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

தலைமுடி வறட்சியாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தலாம். முடி எந்த வகையாக இருந்தாலும், எண்ணெய்யை தலைக்கு தேய்க்கும் முன்னால் சூடாக்கி தேய்ப்பது நல்லது. அது தலைமுடியின் வேர்க்கால்களில் அடிவரை மிக வேகமாக செல்லும். மேலும் முடியை ஈரப்பதமாக இருக்க உதவுகிறது.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது உச்சந்தலையில் மசாஜ் செய்வது மயிர்கால்களை மிக வேகமாக தூண்டும். மேலும் இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் தலைவலியைப்போக்கி உங்களை லேசானதாக உணரவைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்