நம் உடலில் பித்தம் அதிகரித்தல், உடல்சூடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் வாய்ப்புண்ணை வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.
உடல் சூடு, குளிர்ச்சி என பல்வேறு சூழல்களிலும் வாய்ப்புண் ஏற்படுகிறது. இவ்வாறாக ஏற்படும் வாய்ப்புண்ணால் எரிச்சல் ஏற்படுவதுடன், உணவுகளை சாப்பிடும்போது, காரம், உப்பு பொருட்கள் படும்போது எரிச்சல் மேலும் அதிகமாகிறது. இவ்வாறான வாய்ப்புண்களை குணமாக்க எளிமையான வீட்டு மருத்துவ முறைகளை கையாளலாம்
வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் வகையில் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் வாய்ப்புண் வராது. பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.