நம் உடலில் பித்தம் அதிகரித்தல், உடல்சூடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் வாய்ப்புண்ணை வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.
உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் வகையில் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் வாய்ப்புண் வராது.
பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
வாயில் புண் உள்ள இடத்தில் சிறிது வெண்ணெய் அல்லது தேன் தடவி வந்தால் வாய்ப்புண் குணமடையும்.
தண்ணீரில் நெல்லிக்காய் இலையை போட்டு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் சரியாகும்.
மணத்தக்காளி மற்றும் அகத்திக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமடையும்.
புதினா இலையை அரைத்து அதன் சாறை புண் உள்ள பகுதியில் தடவி வர வாய்ப்புண் மெல்ல குணமாகும்.
மாசிக்காயை பால் சேர்த்து அரைத்து, தேன் சேர்த்து தடவி வர வாய்ப்புண் நாளடைவில் சரியாகும்.