துவர்ப்பு சுவை கொண்ட செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியினை கொடுக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக ஆகும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலைவலி, மயக்கம் போன்றவை குறையும். உடலில் ஏற்படும் சோர்வும் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும், உடல் பளபளப்பாகும்.
வெள்ளைபடுதல் குணமாக தினமும் ஐந்து செம்பருத்தி பூ இதழ்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். பொதுவாக பெண்கள் தினமும் ஐந்து பூக்களை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை, இரத்த சோகை, பலவீனம், மூட்டுவலி, இடுப்பு வலி, மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும், பெண்மையும் வளரும்.