மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொய்யாப்பழம்

Webdunia
கொய்யாப்பழம் நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி  செய்கிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்புரை ஏற்படுவதைத்  தடுக்க உதவுகிறது.
 
கொய்யாப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.
 
கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப் பழம் நரம்புகளுக்கு  ஓய்வினை அளிக்கிறது. குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் உதவும்.
கொய்யாவின் தோலில்தான் அதிகச்சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது. மேலும் தோல்  வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையானவர்கள் கொய்யாப்பழத்தினை அதிகம்  சாப்பிடலாம்.
 
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்