கொள்ளு ஊறவைத்த தண்ணீரில் மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளுவை சூப் வைத்து கொடுத்தால், சளி காணாமல் போய்விடும். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம். தினம் காலையில் நொய்யரிசியும் கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.