வயிற்றில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் இஞ்சி !!

Webdunia
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி வயிற்றில் தங்கியிருக்கும் தேவையற்றகொழுப்பு கரையும்.

இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது. இஞ்சியில் இருக்கும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டது. 
 
சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் தினமும் காலை,இரவு என இரண்டு வேளையும் இஞ்சி சாருடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து  வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 
 
இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
 
இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை  இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
 
பெண்கள் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலி  குறையும்.
 
சிறிதளவு இஞ்சியை தட்டி சிறிதளவு தேநீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலில் இஞ்சியின் மருத்துவ குணம் நிறைந்து நன்மை அளிக்கும்.
 
பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்