அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த தொட்டாற்சுருங்கி...!

Webdunia
‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உளவாற்றல் பெருகி  மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும்.
தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர  குழிப்புண் போன்ற புண்கள் குறையும்.
 
ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால்  நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
 
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை  பெருகும்.
 
தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய்  குறையும். 
 
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர்  எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல்  குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
 
தொட்டாற் சுருங்கி இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம்,  பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். 
 
தொட்டாற் சுருங்கி இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். 
 
தொட்டாற் சுருங்கி இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உள்ளே செலுத்த ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு  தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாங்கும் சூட்டில் ஊற்றினால் இடுப்பு வலி, குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்