அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ள பழங்களும் அவற்றின் பயன்களும்!!

Webdunia
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.

வாழைப்பழம் – வைட்டமின் B6, வைட்டமின் C நார்சத்து, பொட்டாசியம். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும் உடலுக்கு சக்தி தரும்.
 
கொய்யாப்பழம் – வைட்டமின் C, வைட்டமின் ஆ போலேட். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும். உடலுக்கு உற்சாகம் தரும்.
 
திராட்சை – வைட்டமின் K, வைட்டமின் B6, காப்பர். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும். முடி அடர்த்தியாகும்.
 
அன்னாசி – வைட்டமின் C, வைட்டமின் B6, நார்சத்து. நன்மைகள்: சருமம் பொலிவடையும். இருதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.
 
மாதுளை – வைட்டமின் E, வைட்டமின் C, போலேட். நன்மைகள்: புற்றுநோயை தவிர்க்க உதவும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும்.
 
பலாப்பழம் – வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் E. நன்மைகள்: இரத்த கொழுப்பை குறைக்கும். உடலுக்கு உற்சாகம் தரும்.
 
சப்போட்டா – வைட்டமின் E, வைட்டமின் C, இரும்புச்சத்து. நன்மைகல்: ஜீரணத்திற்கு மற்றும் உடல் எடை குறைக்க உதவும்.
 
மாம்பழம் – வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் K. நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். ஜீரணத்திற்கு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்