சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் உணவுகள்...!!

Webdunia
சர்க்கரைவள்ளி கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.
காரட் உடல் நலத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.
 
மருத்துவ நன்மை கொண்ட உணவுப் பொருளான இலவங்கப் பட்டையை உணவில் பயன்படுத்துகிறோம். இவை சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
 
தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக்  கொண்டதாகும். இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும்.
 
முள்ளங்கியை அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.
 
உணவை தவிர, தண்ணீரும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தண்ணீர் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்