சென்சிடிவ் சருமத்திற்கு உதவும் இயற்கை அழகு குறிப்புகள் !!

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து  குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் பொலிவோடு மின்னும்.

1 டீஸ்பூன் மசித்த வாழைப்பழ கூழுடன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1-2 டீஸ்பூன் க்ரீன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ச்சியான  நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால் முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
 
பப்பாளியை அரைத்து, அதில் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15  நிமிடம் ஊறவைத்து கழுவினால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும். 
 
சருமத்தில் முதுமை தோற்றத்தை தரும் சுருக்கத்தை போக்குவதற்கு 3 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் தேன் சேர்த்து கலந்து  முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20-30 நிமிடம் ஊறவைத்து கழுவினால் முகம் சுருக்கமின்றி இளமையுடன் காணப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்