யார்யாருகெல்லாம் சர்க்கரை நோய் எளிதில் வரும் தெரியுமா...?

Webdunia
இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே  அதிகமாகப் பாதிக்கிறது.
ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு  சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு.
 
குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான  வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது.
 
கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
 
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மது கல்லீரலைப்  பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
 
கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.
 
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
 
பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. இந்தக் கால  கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்