வேகவைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.
உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.
மஷ்ரூமை சமைத்ததும் சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் மினரல் சத்துகள் ஆபத்தாக மாறும். அஜீரணத்தை உண்டாக்கும். மேலும் அதில் உள்ள நைட்ரஜன் விஷமாக மாறும்.
புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும்.
சிக்கனை மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் விஷமாக மாறும். அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும்.
ஆளிவிதை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கும். அவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் வகையில் வெப்ப நிலைக்கு உகந்ததல்ல.
எனவே அவற்றை சமைக்கும்போதும் சேர்த்துக்கொள்வது தவறு. அவற்றை அப்படியே உணவில், சாலட் வகைகளில் கலந்து சாப்பிடுவதுதான் சிறந்தது.