ஆரஞ்சு பழத்தில் என்ன வைட்டமின்கள் உள்ளது தெரியுமா...?

Webdunia
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்களின் காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம்மை மிகவும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு, அல்சரை குணப்படுத்தும்.
 

அனைத்து பழங்களுமே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. மேலும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது.
 
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க  உதவும்.
 
ஆரஞ்சு பழச்சாறில் இருக்கும் வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதன் காரணமாக உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். நரம்பு மண்டலம் அமைதியாகி, சீராக செயல்பட நல்ல வழிவகை செய்யும்.
 
எலும்பு தொடர்பான பிரச்சனை இருக்கும் நபர்கள் மற்றும் அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் நபர்கள், நரம்பு  தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆரஞ்சுக்கு பழச்சாறு நல்லது.
 
ஆரஞ்சு பழச்சாறில் அதிகளவு அமில உள்ளதால், அதனை அதிகளவு பருகுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். கடைகளில் குளிரூட்டி விற்பனை செய்யும் பழச்சாறுகளை தவிர்த்து, இயற்கையான ஆரஞ்சு பழச்சாறுகளை சாப்பிடுவது நல்லது.
 
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது. மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள  நார்ச்சத்தானது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்