அறுகம்புல் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு வகை புல் ஆகும். இந்த அறுகம்புல்லானது குறுகலான நீண்ட இலைகளை உடையது. நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது.
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், இரத்தப் புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி போன்ற நோய்களைக் குணமாக்கும்.
அறுகம்புல் பொடியைத் தண்ணீரில் குடிப்பதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குறைக்கும்.
வாய்வு கோளாறு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் அறுகம்புல் ஜூஸ் குடிப்பதன் மூலம் வாயுக் கோளாறு குணமாகும். மேலும் இது உடல் உஷ்ணத்தைத் தனித்து உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் மற்றும் குடல் புண்களை ஆற்றும்.
ஆரம்ப கால் புற்றுநோய்க்குக் காலை, மாலை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியை அரை தேக்கரண்டி வெண்ணெய்யுடன் சாப்பிட, ஆரம்ப புற்றுநோய் சரியாகும்.
ரத்த அடைப்பு, உள்ளவர்கள் வெந்நீரில் அறுகம்புல் பொடியினை சாப்பிடச் சரியாகும்.