சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா...?

Webdunia
நீரிழிவு உள்ளவர்கள் எல்லா காய்கறிகளும் சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக கிழங்கு வகைகளைப் பொருத்தவரையில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்தெந்த கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்,

சிகப்பு முள்ளங்கி: சிகப்பு முள்ளங்கியை நிறைய பேர் ஜூஸாகவும் சாலட் போலவும் சாப்பிடுவார்கள். இது மிக வேகமான செரிமானமடையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதில் சர்க்கரைச் சத்தும் மாவுச்சத்தும் அதிகம். உடல் சூடும் இதில் குறையும்.
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இனிப்புச் சத்து மிக அதிகமாக இருப்பதால் தான் அதற்கு இந்த பெயர் வந்தது. வேகவைத்தும், பொரியல் செய்தும், சாலட் செய்தும் சாப்பிடலாம். உடல் பலம் கூடும். அதேசமயம் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.  வாயுத்தொல்லையும் சிறுநீரகக் கோளாறும் உண்டாகும்.
 
மரவள்ளிக் கிழங்கு: மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரை சத்து அதிகமாகவே இருக்கிறது. இந்த கிழங்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
 
வாழைமரக் கிழங்கு: வாழைத்தண்டையும் தாண்டி, வாழை மரத்தின் அடிப்பகுதியில் சேனைக்கிழங்கைப் போன்று ஒரு கிழங்கு காணப்படும். இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. உடல் சூட்டை தணிக்கும் என்பது உண்மை. ஆனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
 
கருணைக்கிழங்கு: கொழுப்புச் சத்து மற்றும் மாவுச்சத்து இரண்டும் அதில் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள திசுக்களில் கொழுப்புக்கள் படிய ஆரம்பித்து விடும். அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
 
உருளைக்கிழங்கு: கொழுப்புச் சத்தும் மாவுச்சத்தும் மிக அதிகமாகக் கொண்ட கிழங்கு வகைகளில் முதன்மையானது இந்த உருளைக்கிழங்கு. இந்த கிழங்கை சாப்பிட்டால் திசுக்களில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்