ஆப்பிளை சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

வியாழன், 19 மே 2022 (17:35 IST)
ஆப்பிள்களில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அவை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.


ஆப்பிளில் ஃபைபர் மற்றும் வைட்டமின் பி 6 உள்ளது. குறிப்பாக, நீங்கள் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கவும், மூளைக்கு நிலையான ஆற்றலை வழங்கவும் உதவும்.

ஆப்பிளில் மெக்னீசியம்  காணப்படுவதால்  மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இதனால் தகவல்களை சிறப்பாக ஞாபகம் வைத்திருக்க முடியும்.

அரைத்த ஆப்பிளை முகத்தில் தேய்த்தால் சுருக்கங்களிலிருந்து விடுபடலாம். மேலும் சருமத்தை சுத்தப்படுத்துகிறது.

முடி மற்றும் நகங்களுக்கு இயற்கையான வளர்ச்சி ஸ்டீராய்டாகக் கருதப்படும் பயோட்டின் என்ற ஊட்டச்சத்து இருக்கிறது . பயோட்டின் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு இழையிலும் வலிமையையும் தடிமனையும் ஊக்குவிக்கிறது. மேலும் இந்த முக்கிய ஊட்டச்சத்து பெறுவதற்கான சிறந்த இயற்கை வழிகளில் ஆப்பிள் ஒன்றாகும்.

ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. நிறைய நீர் சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்