கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் !!

வியாழன், 19 மே 2022 (16:26 IST)
கறிவேப்பிலை உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கிறது. மேலும் கறிவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலம் இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது.  


ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக இரும்புச்சத்து சரியாக உறிஞ்சப்படாமல் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை தூண்டுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். கறிவேப்பிலை மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

அஜீரணத்தைப் போக்க, சிறிது கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.  கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ-யில் கார்னியா மற்றும் கண் மேற்பரப்பைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும்.  இது கண்புரை போன்ற கண் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.

கறிவேப்பிலை முடி வளர தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும்  கொண்டுள்ளது. கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வது முடியை பலப்படுத்துகிறது. பொடுகை குணப்படுத்துகிறது மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்