மலச்சிக்கலைப் போக்குகிறது. முகப்பரு, உடலில் உள்ள வடுக்களைப் போக்க உதவுகிறது. சாற்றைக் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். தொண்டைப் புண்ணும் குணமாகும்.தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். முக்கியமாக வெண்புள்ளி தேமலைப் போக்க வல்லது.
கோதுமை புல் சாறில் இருக்கும் அதிக அளவு என்சைம்கள், உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், வாயு, வீக்கம் மற்றும் வயிற்று அசெளகரியம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உடலில் தேங்கும் நச்சுகளையும், கெட்ட கொழுப்புகளையும் நீக்குவதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
கோதுமை புல் சாறில் இருக்கும் குளோரோஃபில் மூலக்கூறுகள் ஹீமோகுளோபினுக்கு ஒத்ததாக இருப்பதுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், சீராக இருக்கவும் கோதுமை இலைச்சாறு உதவுகிறது.