தடை விதிப்பால் ''டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்'' வசூல் சாதனைபடைக்குமா?

திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:14 IST)
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வசூல் சாதனைபடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சவூதி அரேபியா உள்ளிட்ட  இஸ்லாம் நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டால் வசூல் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகிறது.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ச் ஆப் மேட்னஸ். இப்படம் வ்அரும்             6 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.

இப்படத்தில், எலிசபேத் ஒல்சன், கும்பர்பேட்ச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்பைடர் மேன் 1 -2 ஆகிய படங்களை இயக்கி சேம் ரைமி இயக்கியுள்ளார்.

இப்படம் வரும், மே  5 ஆம் தேதி சவூதி அரேபியாவில் வெளியயாக இருந்த நிலையில்  அந் நாட்டு அரசு இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.   மேலும், இப்படத்தின் வெளியீட்டு சான்றிதழை தரமுடியாது என சவூதி அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 மேலும், இப்படத்தில் ஒசித்தல் கோமேஸ் என்ற நடிகரின் கேரக்டர் தன்பால் ஈர்ப்பாளராக காட்டப்பட்டுள்ளதால் சவுதி அரேபிய தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் இப்படத்திற்கு வசூல் சாதனைபடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சவூதி அரேபியா உள்ளிட்ட  இஸ்லாம் நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டால் வசூல் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்