சருமம் வறட்சியை தடுக்க உதவும் தேங்காய் எண்ணெய்....!!

Webdunia
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்.

* சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.
 
* சமைக்கவும் அதன் இனிய மணத்துக்காகவும் மட்டுமே உபயோகிக்கிறோம். ஆதலால், எளிதாக கிடைக்கும் இந்த எண்ணெய்யின் மூலம் எண்ணற்ற பயன்களை  பெறமுடியும்.
 
* தேங்காய் எண்ணெய் இரண்டு அம்டங்கு ஒரு ‘மாய்ஸரஸர்’ ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும்,
தேங்காய் எண்ணெயைத் தடவி பயனடையலாம்.
 
* தேங்காய் எண்ணெய் ஷேவிங் க்ரீமாகவும் பயன்படும். முகத்தில் தடவி, லேசாக மசாஜ் செய்தபின் ரேஸரை உபயோகிக்கலாம். முகத்தில் காயம் ஏற்படாமல்  தடுக்கமுடியும்.
 
* தேங்காய் எண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும். மேலும் மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தடவினால், மூக்கடைப்பு நீங்கும்.
 
* பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின்மீது தடவினால், சிறிது  நாட்களிலேயே பற்கள் மின்னுவதைப் பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங்சோடாவையும் கலந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்