சித்தரத்தை தூளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலி சரியாகும். உடலில் வாத தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.
சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபச்சரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்து பொடியாக்கி, சிறிதளவு பொடி எடுத்து , தேன் கலந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா நோயின் தாக்கம் குறைந்து, சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று புண்களுக்கு சித்தரத்தை ஓரு நல்ல பலனை அளிக்கும்.
சித்தரத்தையை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும் குரல் கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும்.
மலச்சிக்கல் பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை போக்க சிறிதளவு சித்தரத்தையை எடுத்து, நன்கு இடித்து சலித்து வைத்து கொண்டு இரவு தூங்கும் முன்பு ஒரு சிட்டிகை அளவு பசுப்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.
சித்தரத்தை துண்டை விளக்கெண்ணெய்யில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவி வந்தால் இந்த மாந்த நோய் மற்றும் சளி போன்றவை குணமாகும்.
கிருமி நாசினி சித்தரத்தை ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. சித்தரத்தை அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை பொருளாகும். சிறு குழந்தைகள் மற்றும் தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தினமும் சிறிது சித்தரத்தை கலந்த நீரை பருகுவதற்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்து உடல் நலம் தேறும்.