பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்த‌த்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதை‌த் தடுக்கும்.
 
இதய நோயாளிகள் இயற்கையான பழங்கள் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. பீன்ஸ் காய்கறியும் இதயத்திற்கு செல்லும் நரம்புகளை வலுப்படுத்தி ரத்தம் சீராக செல்வதற்கு வழிவகுக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
 
பின்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனி‌ஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌த் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது.
 
பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.
 
சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.
 
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் கால்சியம் சத்து சிறிதளவு பீன்ஸில் இருப்பதால் இது எலும்புகளை பாதுகாக்கும். பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுக‌ள் சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்