இளநரை ஏற்படுவதற்கான ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!

Webdunia
இளநரை வந்தபின் அவதிப்படுவதைவிட, அதை வரவிடாமல் தடுப்பது எளிது. அதற்காக ரொம்பவே மெனக்கெட வேண்டியதில்லை. உங்கள் சாப்பாட்டில் அக்கறை காட்டினாலே போதும்.

விட்டமின் கே சத்து இல்லாமல் இருந்தால் இளநரை வரலாம். இந்த சத்தைப் பெறத்தான் பலரும் கறிவேப்பிலையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளச்  சொல்வார்கள்.
 
தைராய்டு பிரச்னை, ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வாலும் இளநரை வரலாம். இதனை மருத்துவ ரீதியாக சரி செய்து விடலாம். அளவுக்கு அதிகமாக டென்ஷன் ஆனால் நிறமியின் செல்கள் பாதிக்கப்பட்டு இளநரை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
 
மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும். ஆலிவ் ஆயில்,  விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.
 
கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை  அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
 
வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தேய்த்து வரலாம்.
 
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக  வளரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்