பெண் ஊழியரின் சேலையை இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி...

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (17:03 IST)
டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரின் சேலையை இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
டெல்லி ஏரோசிட்டியில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, அந்த ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை தன்னுடைய அறைக்கு அழைத்த ஓட்டலின் பாதுகாப்பு பிரிவு மேனேஜர் பவான் தாகியா, அவரின் சேலையை பிடித்து இழுத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது அந்த அறையில் மற்றொரு நபரும் நின்று கொண்டிருக்கிறார். ஆனால், அதை தடுக்காமல் அந்த அறையிலுருந்து வெளியேறி விடுகிறார்.
 
இவை அனைத்தும் அந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் அப்பெண் ஊழியர் புகார் அளித்தார். ஆனால், அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதோடு, புகார் கொடுத்த பெண்ணை வேலையை விட்டு நீக்கிவிட்டனர். 
 
இதையடுத்து, போலீசாரிடம் அப்பெண் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பவான் தாகியாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்