கோடைக் காலத்திற்கு ஏற்ற, எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கும் மோரினால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம். கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
நீர் மோர் செய்யும் முறை:
தேவையானவை:
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 ½ கப்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு (பொடியாக நறுக்கியது.)
கொத்தமல்லித் தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான நீர்மோர் தயார்.
நன்மைகள்:
1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2. உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4. மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.