மழை காலத்தில் தலைமுடியை பராமரிக்க சிறந்த பயனுள்ள குறிப்புகள்!!

Webdunia
மழை காலத்திலும் தலைக்கு குளித்து முடியை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். குறைந்தது வாரம் ஒருமுறையேனும் தலைக்கு  குளிக்கவேண்டும்.

தலை முடியை இயற்கையான முறையில் உலர்த்தி பின்பு சீப்பால் வாரவேண்டும். இவ்வாறு செய்யும்போது தலைமுடி உதிர்வு குறையும்.
 
மழை காலத்தில் மயிர்கால்கள் சுத்தமாக இல்லை என்றால் அதிகபடியாக ஈரப்பசையால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வாரத்திற்கு இரண்டு மூன்றுமுறை ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் அழுக்கு சேர்வதை தவிர்க்கலாம்.
தலைக்கு குளிக்க முடிந்த வரை வெந்நீரை தவிர்த்திடுங்கள். உங்கள் முடிகளை மட்டுமாவது குளிந்த நீரால் அலசுங்கள். இது உங்கள் முடி  உதிர்வதை குறைக்க உதவுகிறது.
 
ஷாம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், வெந்தயம், சீகைக்காய், செம்பருத்தி பூ மற்றும் இலை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது. இது இயற்கையை உங்கள் முடியின் எண்ணெய் பசையை அகற்றும்.
 
மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனிங், ஹேர் கலரிங் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதிப்பை அதிகப் படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்