உடல் வலிக்கான சிறந்த வீட்டு வைத்திய குறிப்புகள் !!

Webdunia
இஞ்சியில் இயற்கையாகவே ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளன. இது ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த ஓட்டம் மற்றும் உடலில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. 

இஞ்சி டீ குடிப்பதன் மூலம் உடல் வலியை குறைக்க இயலும். இஞ்சி தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்கிறது. ஒரு துணியில் இஞ்சி பேஸ்டைக் கட்டி, வலிக்கும் இடத்தில் அதைக் கட்டுங்கள். சிறிது நேரம் கழித்து அதைத் திறக்கவும். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
 
ஆப்பிள் வினிகரில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தசை வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

மூட்டுவலி பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பில் வினிகர் கலந்து குடிக்க வேண்டும். மேலும் ஒரு வாளி தண்ணீரில் சிறிது  ஆப்பிள் வினிகரை சேர்த்து குளிக்கவும். இது உங்கள் உடல் வலி பிரச்சினையை குறைக்கிறது.
 
மஞ்சள் இயற்கையாகவே ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் இது ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டிருப்பதால் வலி மற்றும் காயத்தின் சிக்கலை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இது ஒரு வகையில் வலி நிவாரணியாக செயல்படுகிறது.

மஞ்சளை  இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படலாம். ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள்  கலந்து குடிக்கவும். மஞ்சள் பால், வலியைக் குறைக்க நன்மை பயக்கிறது. 
 
கடுகு எண்ணெயைப்   பழங்காலத்திலிருந்தே மசாஜ் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. உடல் வலியின் சிக்கலைக் குணப்படுத்த, கடுகு எண்ணெயை சூடாக்கி மசாஜ்  செய்ய வேண்டும். இந்த எண்ணெயுடன் மசாஜ் செய்யும்போது, ​​தசைகள் தளர்வாகின்றன. இரத்த ஓட்டம் சீராகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்