ஆகர்ண தனுராசனம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா...?

செவ்வாய், 24 மே 2022 (15:13 IST)
வில்லிலிருந்து அம்பை இழுப்பது போன்ற நிலை. செய்முறை: விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டியவாறு அமர்ந்துக்கொள்ள வேண்டும்.


இடது கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில் அணைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும். வலது காலின் விரல்களை இடதுபக்க செவிக்கருகில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

கண் பார்வையை ஒரே இடத்தில் வைக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் மெதுவாக வலது காலை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பின் கால்களை மாற்றி செய்யவேண்டும்.

குறிப்பு: முதுகெலும்பு சிப்பி விலகல், இடுப்பு கூடு பிரச்னை உள்ளவர்கள், தகுந்த யோக நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது உத்தமம். கால அளவு:  25 முதல், 30 வினாடிகள் செய்யலாம்.

பயன்கள்: நெஞ்சுப்பகுதி நன்கு விரிந்து, நுரையீரல் நன்கு வேலை செய்து, சுவாச மண்டல பிரச்னைகள் சரியாகிறது. புஜங்கள் பலமாகிறது.

முதுகில் ஏற்படும் இறுக்கம் குறைகிறது. ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்