சாத்துக்குடி பழச்சாறு அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் !!

Webdunia
சாத்துக்குடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. நமது ஞாபகதிறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துக்குடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. 
 
நார்சத்து சாத்துக்குடியில் நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கவும் உதவுகின்றது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான  தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. 
 
உடலில் புதிய இரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துக்குடி பழச்சாறு அருந்த வேண்டும். உடல் அசதி போகும். அதனால் தான் நோயுற்றவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் சாத்துகுடி சிறப்புற செயல்படுகிறது.  இரத்த சோகை உள்ளவர்களும் தினசரி சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம்.
 
பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துக்குடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்