உணவில் குடைமிளகாயை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (14:11 IST)
குடைமிளகாயை உணவில் நாம் அதிகமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இவை அனைத்தும் குறைவாகவே உள்ளது.


குடைமிளகாய் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை அதிக அளவில் எறிக்க உதவுகிறது. கலோரிகள் குறைந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அதிகமாகவே உள்ளது.

கண்களுக்குத் தேவையான முக்கியமான சத்தான விட்டமின் எ குடைமிளகாயில் அதிகமாகவே உள்ளது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

குடைமிளகாயை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகளை விரைவாகத் தடுக்கலாம்.  உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்