இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.
சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும், இளமையுடனும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஈரப்பதம் கட்டாயம் தேவை. பாதாம் எண்ணெயிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொழிவுடன் காணப்படும்.
பப்பாளி முகத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.பப்பாளி துண்டுகளை நன்கு மசித்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சிடும். சிலர் மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதுண்டு.
வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமான டோனர்களை உருவாக்க முடியும். தக்காளி சாறுடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.
முடிந்தவரை வெயிலில் இருந்து விலகி இருக்கலாம், தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்ல நேர்ந்தால் சருமத்தை வெயிலில் படாமல் மறைத்துக்கொள்வது நல்லது. பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.