முகப்பருக்களை முற்றிலுமாக நீக்க உதவும் அழகு குறிப்புக்கள் !!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (11:02 IST)
முகப்பருவை நீக்க கிரீம் வகைகளை பயன்படுத்துவதை விட இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி பாருங்கள். அது உங்களுக்கு சிறந்த தீர்வை தரும்.

பருக்கள் மீது புதினா இலைகளை அரைத்து தடவலாம். அல்லது வேப்பிலை பொடியுடன் மஞ்சள் சந்தனம் கலந்து பருக்கள் மீது பூசி வரலாம்.
 
பப்பாளி விழுதுடன் அருகம்புல் சாறு, பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமை மற்றும் முகப்பருக்களை நீக்கும்.
 
வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசி பொடி மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறையும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்புறம் தடவக்கூடாது.
 
அருகம்புல் பொடி, குப்பைமேனி இலை பொடி இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் குழைத்து இரவு தூங்கும்போது பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.
 
வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்