சித்தமருத்துவதில் பல நோய்களை குணப்படுத்தும் அதிமதுரம் !!

Webdunia
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி  செய்கிறது.
 

உடலுக்கு ஊட்ட சத்தாகவும், சொட்டு முத்திரத்தை சரிசெய்து, சிறுநீர் புண்களை சரிசெய்து, கல்லடைப்பையும் சரிசெய்கிறது.
 
அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூன்றினையும் சம அளவு எடுத்து, லேசாக வறுத்து பொடி செய்து, 5 கிராம் அளவு எடுத்து, தேனில் தலைக்கு தேய்த்து வந்தால் அதிக சூட்டினால் உண்டாகும் இருமல் சரியாகும்.
 
அதிமதுரத்தை நன்றாக அரைத்து , பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும்.மேலும் முடி உதிர்தலையும் தடுக்கும்.
 
சோம்பு சூரணம் மற்றும் அதிமதுர சூரணம் இவற்றை 5 கிராம் அளவு எடுத்து இரவு படுக்கும் முன்பாக சூடு நீரில் கலந்து குடித்து வந்தால் மலம் இலகுவாக  வெளியேறும்.உள்ளுறுப்புகளின் சூடு தனிந்து சுறுசுறுப்பாக இயங்க உதவும்
 
நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊறவைத்து செய்த கசாயம் நல்ல நிவாரணமளிக்கும். பொதுவாக அதிமதுரம் சித்தமருத்துவதில் பல நோய்களை  குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.
 
அதிமதுரம், கடுக்காய், திப்பலி, மிளகு சேர்த்து வறுத்து பொடிசெய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.கண் ஓளி பெறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்