பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
பயத்தங்காய் வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.
பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் பொருள் சில வகையான புற்றுநோய், பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.