தோலின் மேல் பகுதியில் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தவல்லது. மேலும் குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.
அருகம்புல்லானது சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட பல சிறுநீரகக் கோளாறுகள், ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சகச் சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடல்சோர்வு ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களைப் போக்கவல்லது.
செய்முறை: இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும். அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.