கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்,பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.10 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும், கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது ஆகும் வரை மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயது ஆகும்போது, ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மோடி உறுதியளித்துள்ளார். இதில், கொரோனாவால் பெற்றோரை இழந்த அல்லது கார்டியனை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.