அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு சரிசெய்யலாம்...?

சனி, 20 ஆகஸ்ட் 2022 (12:36 IST)
நெல்லிக்காய் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த பயனளிக்கும் மருந்தாக விளங்குகிறது. உணவு உட்கொள்வதற்கு முன்னர் ஒரு கப் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.


நெல்லிக்காயில் முடிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. நெல்லிக்காயை தொடர்ந்து செய்து வர சில நாட்களிலேயே உங்கள் உடல் எடை குறைவதை உணர்வீர்கள்.

நெல்லிக்காய் தலை முடியின் வேர்களை வலுவாக்கும், பொடுகு தொல்லையை நீக்கும், அடர்த்தியான தலை முடியை பெற உதவும். தலைமுடிக்கு நெல்லிக்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது நல்ல பலனை நிச்சயம் அளிக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்திட நெல்லிக்காய் பயன்படுகிறது.

நெல்லிக்காய் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு இயற்கையான மருந்து ஆகும். இது உங்கள் ரத்த நாளங்களை வலுவாக்குகிறது, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வரலாம்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும். எனவே அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட கூடியவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்