அம்மான் பச்சரிசி ஆங்கிலத்தில் ஆஸ்துமா ப்ளாண்ட் என்றழைப்படுகிறது. இதனை ஆஸ்துமா தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூச்சுவிடுவதில் சிரமம், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சைனஸ், தும்மல், மூக்கடைப்பு மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க வல்லது பிறகு அம்மன் பச்சரிசி இலைகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட ஆஸ்துமா தொடர்பான பிரச்சினைகள் குணமடையும். இரத்தத்திலுள்ள கெட்ட அழுக்குகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வேப்பிலை இலைகளுடன் மிளகு அம்மன் பச்சரிசி இலைகள் மூன்றையும் அரைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. பலவீன உடலுக்கு உடல் வலிமையை தருகிறது. நீண்டநாளாக ஆறாத காயங்களை குணமாக்கவல்லது. கை கால்களில் வீக்கம் உள்ள இடங்களில் இலைகளை அரைத்து பற்றுப் போட்டு வந்தால் ஐந்து நாளில் வீக்கங்களும் வலியும் குறைந்து குணமடையலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியது.
அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைக்கும் பொழுது வருகின்ற பாலில், அதிகளவு கால்சியம், அஸ்ட்ரிஜண்ட், டோனிக் போன்றவை காணப்படுகிறது. வயிற்றுபுண், வாய்புண், தோல் நோய்களுக்கு மருத்தாகிறது. அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் கருமையான இடங்களில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி வந்தால், இழந்த பொலிவை திரும்பவும் பெற முடியும்.
அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் பாசிப்பருப்புடன் அம்மான் பச்சரிசி கீரையை சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் அல்சரில் இருந்து முழுமையான குணம் அடையலாம்.